Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லைனா பணம் கிடைக்காது…!!!

Pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் புதிய விதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கே.ஒய்.சி எனப்படும் சரிபார்ப்பு முடித்தால்தான் பணம்  கிடைக்கும். இல்லாவிட்டால் நிதி உதவி வருவதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று ‘Farmers Corner’ என்ற ஆப்சனை அழுத்தவும். அதில் e-kyc என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்றால் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு ‘Get OTP ‘ பட்டனை கிளிக் செய்தால் ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ’submit Submit For Authentication’ கிளிக் செய்ய வேண்டும்.

இதற்கு முன் pm-kisan திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார் வங்கி கணக்கு மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அவசியமாக இருந்தது. அதில் ஏதேனும் பிழை திருத்தம் இருந்தால் பணம் சரியாக வந்து சேராது. ஆனால் தற்போது சரிபார்க்கும் விதிமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |