Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே உடனே போங்க…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும்  வழிவகை செய்துள்ளது.

இந்நிலையில் வேளாண் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தமிழக அரசின் உழவன் செயலியில் ஆதார் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் உங்கள் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |