Categories
விவசாயம்

விவசாயிகளே!…. எள்ளு டூ தர்பூசணி…. கோடைக்காலத்தில் வருமானம் ஈட்ட….. இதை பயிரிடுங்க….!!!!!!

உரம் விலை அதிகமாகி நிலத்தடி நீர் இருப்பு குறைந்தாலும் விவசாய நிலத்தை வறட்சிக்கு ஆளாக்காமல் கோடையின் நீராதாரத்திற்கு ஏற்ற அடிப்படையில் எள்ளு முதல் தர்பூசணி வரை தோட்டப்பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். இதனிடையில் சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம், பஞ்செட்டி, நெடுவரம்பாக்கம், ஜெகன்னாதபுரம், சத்திரம், குதிரைப்பள்ளம், நெற்குன்றம், ஞாயிறு ஆகிய திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் விவசாயம் உயிர்ப்புடன் இருக்கிறது. தற்போது நெல் பயிருக்கு அடுத்து கோடையின் நீராதாரத்திற்கு ஏற்றவாறு எள்ளு, வெள்ளரி, வெண்டை, கத்திரி, முள்ளங்கி, பச்சைப்பயிறு, பச்சை மிளகாய், வேர்க்கடலை, தர்பூசணி, கிர்ணி, வாழை மற்றும் கீரை வகைகள் என்று தோட்டப் பயிர்களும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.

மேலும் ரோஜா, மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம், காக்கட்டான், சம்பங்கி பூக்களையும் விவசாயிகள் விளைநிலங்களில் பயரிட்டுள்ளனர். இதற்கிடையில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் இல்லாமல் பூக்களின் விலையானது குறைந்துள்ளது. அதாவது சாமந்தி பூ 1 கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கும், மல்லிகை, கனகாம்பரம் ஆகியவை 300 கிராம் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகவே திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட விசேஷங்கள் அதிகமாக இருந்தால் பூக்களின் விலையும் அதிகரிக்கும். ஆனால் அதற்கு மே மாதம் வரையிலும் காத்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சிறியதும், பெரியதுமான காய்கறி மற்றும் பூக்களின் தோட்டம் பசுமை பேசுகிறது. அவை அனைத்துமே 2 முதல் 3 மாத கால பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் கோடையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் அனைத்து விவசாய நிலத்திலும் நெல் பயிரிட வாய்ப்பு இல்லை. இதனால் குறைந்த நீரில் விவசாயத்தை மீட்கும் அடிப்படையில் மேற்கண்ட மலர், காய்கறி உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் விளைவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த பகுதியை சுற்றி மீன் வளர்ப்பு பண்ணை, பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை கழிவுகளால் பல வகையான பூச்சிகள் பெருகி தோட்டப் பயிர்களை சேதப்படுத்திவிடுகின்றன. இதன் காரணமாக மகசூல் பாதிக்கப்படுவதாகவும் வருந்துகின்றனர். பயிர்களுக்கு தேவையான அடிஉரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை கடந்தாண்டை விடவும் இருமடங்காக அதிகரித்துள்ளது. பயிர்களை காக்க அதை வாங்கி பயன்படுத்துகிறோம். இயற்கை விவசாயம் செய்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

அதற்கு எருக்கம், வேம்பு, புங்கன், நொனா இலைகளை, விவசாய நிலத்தில் மக்கவைத்து மண் வளத்தை இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற அடிப்படையில் மாற்றி பதப்படுத்த வேண்டும். அவற்றிற்கு 6போகம் விவசாயத்தினை இழக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. ஏராளமான இடங்களில் மரங்கள் இல்லாததே அதற்கு காரணம் ஆகும். தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தால் ரசாயன உரங்களின் தாக்கம் குறையும். மேலும் மக்களுக்கு இன்னும் சத்தான காய்கறி உள்ளிட்ட உணவு தானியங்கள் கிடைக்கும்.

Categories

Tech |