விவசாயம் என்பது பயிர் சாகுபடியைப் பிரதானமாகக் கொண்ட ஒன்றாகும். எனினும் கால்நடைகளை வளர்த்தல், அதற்கு தேவையானத் தீவனங்களையும் சேர்த்துப் பயிரிடுதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் தடுக்கும் இயற்கை முறையில் மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் மற்றொரு புறம் செய்து வருவது கூடுதல் வருமானம் ஈட்ட வழி வகுக்கும்.
சிறு, குறு விவசாயிகள்:
இந்தியாவைப் பொறுத்தவரையிலும் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். தமிழகத்திலும் ஏற்றத்தாழ அதே நிலைதான் என்று சொல்லாம். சராசரியாகசொன்னால் இந்தியாவில் வசித்து வரும் விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் சுமார் 1.5 ஏக்கர் நிலம் இருக்கிறது.
வருமானம் ஈட்டும் வழிகள்:
இந்த நிலத்தைக் கொண்டு பயிர் செய்வதுடன் கூடுதல் வருமானத்திற்கான வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அரசின் திட்டங்கள்:
விவசாயத்தைப் பொறுத்தவரையிலும் உழவு செய்ய ட்ராக்டரில் இருந்து இறுதியாக அறுவடை செய்யக்கூடிய எந்திரம் வரையிலும் பணம் அதிகமாக செலவு ஆகும். இந்த இயந்திரச் செலவுகளைக் குறைப்பதற்கு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தலாம்.
இயற்கை உரங்கள்:
இயற்கை விவசாயமாகச் செய்யும்போது பல்வேறு இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும். இதனை ஒருக் குழுவாகவோ (அல்லது) FPO-கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடுபொருட்கள் செலவு மேலும் குறையும் நமக்கு வருமானமும் பெருகும்.
தேனீ வளர்ப்பு:
இயற்கை விவசாயத்தில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. இதனால்தான் விளை நிலங்களின் தேவதை என்று தேனீக்கள் அழைக்கப்படுகின்றன.
தேனீப் பெட்டி வைத்து வளர்க்கும்போது நமக்கு 2 லாபம் கிடைக்கிறது. அதாவது ஒன்று நமக்கு மகசூல் அதிகமாக கிடைக்கும், 2-வது நல்லத் தேன் கிடைக்கும்.
இதனை விற்பனையும் செய்யலாம், தேன் கெட்டுப் போகாத உணவு என்பதால் நீண்ட நாட்கள் கூட வைத்திருக்கலாம்.
தேனீப் பெட்டி:
1 ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 3 தேனீப் பெட்டியை வாங்கி வைக்கலாம். உங்களிடம் அதிக இடம் இருந்தால் தேனீ வளர்ப்பைத் துணைத் தொழிலாகவும் செய்யலாம்.
பல பயிர் சாகுபடி:
இயற்கை விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட பயிர்சுழற்சி முறையினை கையாள வேண்டும். இது உங்கள் மண்வளத்தைக் பாதுகாக்கும். தொடர்ச்சியாக ஒரே வகை பயிரை சாகுபடி செய்தால் பூச்சி நோய் தாக்கங்கள் அதிகரிக்கலாம். அதே நேரம் வெவ்வேறு பயிர்களை பயிர் செய்யும்போது நமக்கு வருமானம் கிடைக்கும்.
மதிப்புக் கூட்டுதல்:
இயற்கை விவசாயம் மூலம் அதிகமான லாபம் பெறுவதற்கு மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது மிகவும் முக்கியம் ஆகும். இந்தியாவிலிருந்து விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவில் சட்டங்கள் இருக்கின்றன. அதற்குப் பூச்சிக் கொல்லியைத்தான் பயன்படுத்த வேண்டும். அதையும் இவ்வளவு தான் பயன்படுத்தவேண்டும் என்றக் கட்டுப்பாடும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஒருவர் மரவள்ளியை பயிர் செய்து மதிப்புக் கூட்டி வைத்துள்ளார். அதையே நீங்கள் மரவள்ளி பயிரில் இயற்கை விவசாயம் செய்து மதிப்புகூட்டி வைத்துளீர்கள் என்றால் உங்களுடைய பொருள் சுலபமாக ஏற்றுமதி ஆகும். மேலும் அதிகமான வருமானமும் கிடைக்கும். இதன் காரணமாகதான் அரசாங்கத்தால் இயற்கை விவசாயத்தினை செய்வதற்கு அதிகமாக வலியுறுத்தப்படுகிறது.
திட்டமிட்டுப் பயிரிடுங்கள்:
அடுத்ததாக எந்தபயிருக்குத் தேவை அதிகமாக உள்ளது என்பதனை அறிந்து அப்பயிர்களை சாகுபடி செய்யலாம். உதாரணமாக நம் அனைவர்க்கும் தெரிந்தது வெங்காயம், எப்பொழுது வேண்டுமானாலும் விலையேறும். ஆகவே திட்டமிட்டுப் பயிரிட வேண்டும்.
விவசாயமும் மாடுவளர்ப்பும்:
1 மாடு இன்றி இயற்கை விவசாயம் முழுமை அடையாது. விவசாயத்தில் 40 சதவீதம் செலவு இதன் மூலம் குறையும். கடைசின்போது தொழு உரம் தேவைப்படுவதால் நம்மிடம் 1 மாடு இருந்தால் அது தேவைப்படாது. மேலும் பூச்சி விரட்டி தயாரிக்கலாம், நமக்குத் தேவையான பால் கிடைக்கும். வியாபாரம் நோக்கமின்றி விவசாயத்திற்காக வாங்குவதால் 1 நாட்டு மாடு (அல்லது) கலப்பின மாட்டை வாங்கலாம் சிறிது மெனக்கிட்டால், மற்றொரு மாடும் வாங்கலாம். கன்றுகள் மூலமாக நமக்கு வருமானம் கிடைக்கும்.