Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ஜாலி ஜாலி…. ரூ.2000 பணம் எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 9 தவணை செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் 10வது தவணைப் பணமானது எப்போது செலுத்தப்படும் என்று விவசாயிகளின்  காத்துள்ளனர்.

இந்த நிலையயில் பத்தாவது தவணையானது டிசம்பர் 16ஆம் தேதி(நாளை) விவசாயிகளுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளுக்கான 2000 ரூபாய் தொகையை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 10ஆம் தவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும் அரசு முடித்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இதுவரை இன்னும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறாத  விவசாயிகள் pmkissan.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

Categories

Tech |