Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…. நாளை முதல் பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் …. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மேல் மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், கோட்டூர், சந்தவேலூர், பிள்ளைபாக்கம், காந்தூர், அத்திவாக்கம், வாலாஜாபாத், புத்தகரம், அகரம், கோவிந்தவாடி, பரந்தூர், சோமங்கலம், படப்பை, பட்டாம்பாக்கம், பழந்தண்டலம், ஓரத்தூர், மலைப்பட்டு, அவலூர், பூசாரி விப்பேடு, இளையனார் வேலூர், கீழக்கதிர்பூர், உத்திரமேரூர், அண்ணா ஆத்தூர், இளநகர், பெருங்கோழி, மலையாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  நாளை முதல் 30-ஆம் தேதி வரை  அதிவிரைவு விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

இதில் வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மைய அதிகாரிகள், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், இ-சேவை மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிர் காப்பீடு திட்டத்தின் அவசியம், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மை, காப்பீடு செய்யும் முறைகள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் தொகை போன்றவை குறித்து முகாமில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |