Categories
விவசாயம்

விவசாயிகளே!…. நெல்லியை சாகுபடி செய்யணுமா?…. இதோ சில டிப்ஸ்…..!!!!!!

நெல்லியை சாகுபடி செய்வது எப்படி?

நெல்லியை 1 ஏக்கர் பரப்பளவில் 15அடி இடைவெளி விட்டு சுமார் 200 கன்றுகள் வரையும் நட்டு வைக்கலாம். நடவுகுழி 2-3 அடி குழி எடுக்க வேண்டும். அதில் மண்புழு உரம் 2 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்றவற்றை 50 கிராம் வீதம் மொத்தம் 250 கிராம் 1 குழியில் இட்டு நடவேண்டும். 1 ஏக்கரில் 75 கன்றுகள் NA 7ம், 75 கன்றுகள் காஞ்சன், மீத உள்ள சாக்கையா கிருஷ்ணா போன்ற  ரகங்களில் ஒவ்வொன்றிலும் 25 கன்றுகள் வீதம் நட வேண்டும்.

கன்றுகள் நடும்போது கவனிக்க வேண்டியது எவையெல்லாம்?

# நடவின்போது 3 (அல்லது) 4 ரகங்களை கலந்து நடவு செய்யலாம்.

# ஒட்டு பகுதியில் அடியில்வரும் பக்கத்தளிரை கிள்ளிவிடவும்.

# 2 வரிசைக்கு இடையே நடும்போது குட்டையான ரகங்களை மத்தியில் நடவு செய்யலாம்.

# தோப்பைச்சுற்றிலும் காற்றை தடுப்பதற்கு சவுக்கு நடவு செய்யலாம்.

# ஏக்கருக்கு 4-6 தேனீ பெட்டி வைத்தால் மகரந்தச் சேர்க்கையின் வாயிலாக பூ பிடிப்பது அதிகமாக்கலாம்.

# மரங்களை குட்டையாக வளர்க்க வேண்டும். இதனால் ஒடிவது மற்றும் மகசூல் இழப்பு குறையும்.

# காய் பறித்த பிறகு கவாத்து 1 (அல்லது) 2 முறை செய்யவேண்டும்.

# தூர்பகுதியில் (உலர் மூடாக்கு) வெப்பத்தை கட்டுப்படுத்த செய்தால் நன்றாக இருக்கும்.

நெல்லி பராமரிப்பு

நெல்காய்கள் நன்கு திரட்சியாக இருக்க 15 நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு 2 லிட்டர் வீதம் அமிர்தகரைசலும், பூச்சி வராமல் தடுக்க பஞ்சகாவ்யம் மற்றும் பூச்சி விரட்டியையும் தெளிக்க வேண்டும். உரம் 5 ஆண்டு என பார்த்தால் 25 கிலோ சாணம், 5 கிலோ மண்புழு உரம் மற்றும் 250 முதல் 500 கிலோ வரையும் எலும்புத்தூள் இடலாம். இதனை மரத்தின் வயதுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு வருடமும் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.

இயற்கை முறையில் உரம் மருந்து கொடுத்தால் காய்கள் திரட்சியாகவும், பளபளப்பாகவும், சுருக்கம் இன்றியும், கரும்புள்ளிகள் இல்லாமலும் இருக்கும். இதனைத்தான் வியாபாரிகள் அதிகம் விரும்புவார்கள். அதுமட்டுமல்லாமல் நெல்லி வருடத்துக்கு இரு முறை பூ பிடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதியில் காஞ்சன் ரகம் வருடம் முழுவதும் பூத்து காய்க்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பின் காய்ப்பு நன்றாக இருக்கும். எனினும் பிப்ரவரி மாதத்தில் பூக்கும் பூ காயாக மாறுவது குறைவு. ஜூலையில் பூக்கும் பூக்களில் அதிக காய்கள் கிடைக்கிறது. அந்த நேரம் விலை குறைவாக இருக்கும்.

Categories

Tech |