Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பயிர் காப்பீடு செய்வதற்கு இ- சேவை மையங்கள் இயங்கும் என்று வேளாண்மை துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு செய்வதற்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆனால் கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15 கடைசி நாளாகும். மற்ற மாவட்டங்களுக்கு நாளையே கடைசி நாள். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

Categories

Tech |