Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! பிஎம் கிசான் திட்டத்தில்…. பெயரை இணைப்பது எப்படி…? முழு விபரம் இதோ …!!!

விவசாயிகள் தங்கள் பெயரை pm-kisan வெப்சைடில் பதிவு செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை பற்றி  காண்போம்.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள்  மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். ஒரு தவணைக்கு  2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 10 தவணைகள்  வழங்கப்பட்டுள்ளன. இதில் 11 தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் நிறைய பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு  குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன் பெறமுடியும் என்ற விதிமுறை ஆரம்பத்தில் இருந்துள்ளது. அதன்பின் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய அளவு நிலம் வைத்திருப்பவர் கூட  திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும். இதில் இன்னும் இணையாமல் இருக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்புள்ளது. அடுத்த தவணை வருவதற்குள் தங்கள் பெயரை இணைத்து  கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

பி.எம் கிசான் www.pmkisan.gov.in. வெப்சைட்டில் சென்றால் ‘Farmers Corner’ என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதில் கிளிக் செய்து ‘New farmer registration’ என்பதை தேர்வு செய்ய  வேண்டும்

இப்போது பிஎம் கிசான் திட்டத்தில் இணைவதற்கான அந்த விண்ணப்பத்தில் உங்களுடைய பெயர், முகவரி, நில இருப்பு, மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பதிவிட்டு ‘submit’ கொடுக்க வேண்டும்.மேலும் உங்களது பதிவு விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ‘Beneficiary Status’ என்பதில் பார்க்கலாம்.

 

Categories

Tech |