விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்டை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.02.2022 வரை இருந்தது.
மேலும் தக்காளி, வாழை மற்றும் மரவள்ளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 28.02.2022 ஆகும். இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றே பொதுசேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இந்த திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையலாம் என்று சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா தெரிவித்துள்ளார்.