Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே… பிரதமர் மோடியை நம்புங்கள்… பிரபல பாடகர் வேண்டுகோள்…!!!

பிரதமர் மோடி மக்களுக்கு சிறந்ததையே செய்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மோடியை நம்ப வேண்டும் என பிரபல பாப் பாடகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த தலர் மெஹந்தி என்பவர் பங்ரா மற்றும் பாப் இசை பாடல்களின் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தவர். இவர் பாடலுகளுக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நானும் கூட ஒரு விவசாயி தான். பிரதமர் மோடி மக்களுக்கு சிறந்ததையே செய்து வருகிறார். விவசாயிகளான நாம் அனைவரும் மோடியை நம்ப வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |