Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே… மத்திய அரசு வழங்கும் ரூ.2000 நிதியுதவி பெற….. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கான நிதியுதவியை மத்திய அரசு விரைந்து வழங்குகிறது.

கடந்த மே மாதம்தான் இத்திட்டத்தின் 8-வது தவணைப் பணத்தை சுமார் 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ19,000 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு டெபாசிட் செய்தது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் ஒன்பதாவது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் தகுதியுடைய விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2,000 டெபாசிட் செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்குப் பணம் வந்துசேரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களது விவரங்களைத் தவறாகப் பதிவிட்டால் இப்பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பதிவிடுவதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் பணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

அதனால் https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் சென்று Farmer Corner என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Edit Aadhaar Details என்பதை உள்நுழைய வேண்டும். விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணைப் பதிவிட்டு கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு Submit கொடுக்க வேண்டும்.உங்களது பெயர் விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் இதில் நீங்கள் திருத்திவிடலாம். ஒருவேளை திருத்தவே முடியாத பிழைகள் இருந்தால் வேளாண் துறை அலுவலகத்தைப் பார்வையிட்டு அதைச் சரிசெய்ய வேண்டும்.

Categories

Tech |