நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான விழாவை காணொளி வாயிலாக நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சௌரி சௌரா சம்பவம் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். சௌரி சௌரா சம்பவத்தில் வீரமரணமடைந்தவர்களைப்பற்றி துரதிர்ஷ்டவசமாக அதிகம் பேசப்படாமல் போய்விட்டதாகவும், வரலாற்றுப் பக்கங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதாகும் சுட்டிக்காட்டினார்.
சௌரி சௌரா போராட்டத்தில் விவசாயிகளின் பங்கு இருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியில் அவர்களுக்கு அதிக பங்கு இருப்பதாக தெரிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகள் சுய சார் முடிவுகளாக மாற்றம் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது, நன்மையைச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும், விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் வேளாண் மண்டிகள் உருவாக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமையே நம் முன்னுரிமை என நம் உறுதிமொழி ஏற்க வேண்டுமென என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி நாட்டின் அனைத்து தரப்பு மக்களுடனும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.