Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 உங்களுக்கு வேண்டுமா?…. அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது பிஎம் கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே 13ஆவது தவணை வழங்கப்படும் என  மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாக அல்லது தங்களது கைபேசி மூலமாக தங்களின் ஆதார் எண்ணை பிஎம் கிஷான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். உங்களின் கைபேசியில் இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.inஎன்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் இ கேஒய்சி என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணெய் உறுதி செய்யலாம். தற்போது வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் ஆதார் எண்ணை உடனே உறுதி செய்யுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |