நாடு முழுவதும் விவசாயிகளுக்கு புத்தாண்டில் ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இன்று முதல் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 10-வது தவணையாக 2000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்தாவது தவணைப் பணம் பாக்கி வழங்கப்படுகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வந்துள்ளதா என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அதற்காக எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முதலில் PM Kisan இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் பெனீபீஷியரி ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் 3 விருப்பங்கள் தோன்றும். அவை ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு எண்.
இவற்றிலிருந்து ஆதார் எண்ணை தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். உங்களுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் கிடைத்ததா இல்லையா என்பது இப்போது உங்களுக்கு தெரியும். பணம் வந்திருந்தால் 10வது தவணை என்ற இடத்தில் காண்பிக்கும். அப்படி இல்லை என்றால் அதில் காண்பிக்காது. இதனை தவிர pm-kisan மொபைல் செயலி மூலமாகவும் பணம் வந்துள்ளதா என்பதையும் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.