Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 பணம்…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே டைம் இருக்கு… உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது.

அதாவது விவசாயிகள் ஆதார் வாயிலான கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம் முடிக்க வேண்டும். கேஒய்சி என்பதை வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் நடைமுறையாகும். பொதுவாக இந்த நடைமுறையை வங்கிகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன. எனவே pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவரும் நிதி உதவி பெறுவதற்கு சரிபார்ப்பு மிகவும் அவசியம். அதனை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அதற்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த கேஒய்சி சரிபார்ப்ப எப்படி முடிப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான முழு விவரம் இதோ.

முதலில் https://pmkisan.gov.in/ என்ற பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ’farmers corner’ என்ற வசதியின் கீழ் eKYC என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுடைய ஆதார் நம்பரை பதிவிட்டு search கொடுக்க வேண்டும்.

உங்களுடைய மொபைல் நம்பருக்கு 4 டிஜிட் ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும்.

Categories

Tech |