Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய அப்டேட்…!!!

Pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணைப் பணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள  விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் எனும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூபாய் 6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது 11 வது தவணை  எப்போது கிடைக்கும் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2022 மார்ச் மாதம் 1-ஆம் தேதியன்று வெளியாகும் எனவும் இதில் தாமதம் ஆனால் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் பணம் வரவில்லை என்றால் அந்த நபர்கள் இந்த எண்களில் புகார் செய்யலாம்

PM கிசான் இலவச எண் – 18001155266.

பிஎம் கிசான் ஹெல்ப்லைன் எண் – 155261.

லேண்ட்லைன் எண்கள் 011 23381092, 23382401.

புதிய ஹெல்ப்லைன் – 011 2430066

மேலும் இத்திட்டத்தின் பயனாளிகள் Ekyc செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Pm-kisan வெப்சைட்டில் சென்று   விவசாயி தனது ஆதார் எண் மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட தங்களுடைய ஸ்டேட்டஸ் சரி பார்த்துக் கொள்ளலாம். 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் EKYC  முடிக்காவிட்டால் பணம் கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளது.  வெப்சைட்டில் உள்ள ‘farmers corner’ வசதியில் இ கே ஒய் சி முடிக்கலாம்.

Categories

Tech |