மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். சமீபத்திய அப்டேட்டின்படி, வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12ஆவது தவணைப் பணம் வரும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் ரூபாய் 2000 பணம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் விண்ணப்ப நிலை எப்படி இருக்கிறது என்பதையும் அடிக்கடி சரிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலருக்கு இது சிரமமாக இருப்பதால் மத்திய அரசு இதற்கு மாற்றாக இன்னொரு ஏற்பாடு செய்துள்ளது. அது என்னவென்றால் பிஎம் கிசான் ஸ்டேட்டஸ் மற்றும் அப்டேட்களுக்கு டோல் ஃப்ரீ நம்பரை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 155261 என்ற எண்ணுக்கு அழைத்தால் அனைத்து அப்டேட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.