Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் வந்துட்டான்னு…. எப்படி பார்ப்பது…? தெரிஞ்சுக்கோங்க…!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.

11 தவணை பணமானது ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போது உங்கள் கணக்கில் 11 தவணை டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம். இதற்கு முதலி https://fw.pmkisan.gov.in/BeneficiaryStatus/BeneficiaryStatus.aspx என்ற பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது திரையில் ஆதார் எண், மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும்.

இதனை சரியாக நிரப்ப வேண்டும். இதையடுத்து ஆதார், மொபைல், கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக உங்கள் கணக்கில் பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுள்ளீர்களா என்பதை தெளிவாக பார்க்க முடியும்.

Categories

Tech |