குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதற்காக ரூபாய் 1500 நிதியுதவி வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனில் அம்மாநில அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. மேலும் விவசாயிகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதையும் ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விவசாயத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயம் சார்ந்த அரசின் புதிய அறிவிப்பு, விலை பொருட்கள் கொள்முதல், விலை அறிவிப்புகள், நோய்தொற்று ஆகியவற்றை தெரிந்து கொள்ள குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலமாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாங்க மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த விலை 10 சதவீதம் அல்லது 1500 ரூபாய் என இவற்றில் எது அதிகபட்சமாக இருக்கிறதோ அந்தத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.
ஸ்மார்ட்போனில் இணைய சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகள் மூலமாகவும் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க படுத்திக்கொள்ளலாம். இந்த நிதி உதவியை பெறுவதற்கு ikhedut.gujarat.gov.inஎன்ற குஜராத் அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.