Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ஹேப்பி நியூஸ்…. ரூ.2000 எந்த தேதியில் தெரியுமா…? லீக்கான தகவல்…!!!!

பிஎம் கிசன் திட்டத்தின் 11 ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11 ஆவது தவணைப் பணம் அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வர இருக்கிறது. ஆனால் பல விவசாயிகளின் கணக்குகளில் FTO உருவாக்கப்பட்டு பணம் செலுத்துவதற்கான நிலை நிலுவையில் இருக்கிறது FTO என்பது Found Transfer Order . உங்களுடைய கணக்கிலும் இப்படி உள்ளதா என்பதை உடனடியாக பாருங்கள். இல்லை எனில் அடுத்த மாதம் உங்கள் கணக்கில் பணம் வராமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

2022 ஜனவரி 1ஆம் தேதியன்று மத்திய அரசு pm-kisan திட்டத்தின் பத்தாவது தவணை பணத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் மாற்றியுள்ளது. தற்போது அடுத்த தவணை பணம் ஏப்ரல் மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. pm-kisan பணம் வங்கி கணக்கில் வரும் போது அதன் நிலையை விவசாயிகள் சரிபார்க்க வேண்டும். பல விவசாயிகள் இன்னும் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை எனவும் சிலருக்கு பணம் வருவதற்கான உறுதிப்படுத்துதல் நிலுவையில் இருப்பதாகவும் புகார்கள்  தெரிவிக்கின்றனர்.

உங்களுக்கும் அப்படி இருந்தால் கவலை வேண்டாம் உங்கள் பணம் கண்டிப்பாக வந்து சேரும்.FTO உருவாக்கப்பட்டு விட்டது என்றால் உங்களின் முழுமையான தகவல் சரிபார்க்கப்பட்டு சில நாட்களுக்குள் கிசன் சம்மன் நிதி பணம் உங்களுக்கு மாற்றப்பட்டு விடும் என்பது பொருளாகும். இது குறித்த தகவலை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு PM கிசான்  வெப்சைட்   சென்று பார்க்கலாம். வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே உங்களுடைய ஸ்டேட்டஸ்  நிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |