பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.அதில் ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் என மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன. அதன் 9வது தவணைப் பணம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பல விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.
இதில் தகுதியுடைய விவசாயிகளுக்கு அவர்களின் நிதி உதவி வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இதற்கு ஆதார் முக்கியம். சில சமயங்களில் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறாக வழங்கப்பட்டால் நிதியுதவி வந்து சேராது. எனவே இந்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். எல்லாம் சரியாக இருந்தும் பணம் வராமல் இருந்தால் pm-kisan இணையதள பக்கத்தில் அதனை சரி பார்க்க முடியும். அதனை வீட்டிலிருந்தே செய்யலாம்.
www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
ஹோம் பேஜில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் ’beneficiary list’ என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய மாநிலம், மாவட்டம், பிளாக், கிராமம் போன்ற விவரங்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
‘get report’ கொடுத்து மீண்டும் beneficiary list கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்களது பெயரை சரிபார்த்து confirm கொடுக்க வேண்டும்.
மீண்டும் ஹோம் பேஜுக்குச் சென்று beneficiary status சரிபார்க்க வேண்டும்.