மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. 10-ஆவது தவணைப் பணம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் pm-kisan திட்டத்தின் கீழ் நிறைய பேருக்கு பணம் வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது. பயனாளிகளின் பெயர், வங்கி கணக்கு விவரம், ஆதார், மொபைல் நம்பர் போன்ற தகவல்களை தவறாக வழங்கியிருந்தால் நிதியுதவி சரியாக வந்து சேராது. இத்திட்டத்துக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
ஒருவே?ளை அனைத்தும் சரியாக இருந்தும் பணம் வராமல் இருந்தால் என்ன செய்வது
Pm-kisan திட்டத்தில் தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதி உதவி வராமல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக டோல் ஃப்ரீ நம்பர் உள்ளது. அந்த நம்பரில் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.
பிஎம் கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266
பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261
லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401
பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606
மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109
மேற்கூறிய எண்களில் விவசாயிகள் புகார் கொடுக்கலாம்.