இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பத்தாவது தவணையாக 2000 ரூபாய் நிதி உதவி வங்கி கணக்கில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களுக்காக பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி pm-kisan வெப்சைட்டில் விவசாயிகளுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தனிநபர் விவரங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். அதாவது இ-கேஒய்சி முடிக்க வேண்டும். ஆதார் சரிபார்ப்புக்கு விவசாயிகள் உட்பட வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி பதிவிட்டு உறுதி செய்ய வேண்டும். அதனைப்போலவே கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
அல்லது pm-kisan வெப்சைட்டில் அப்டேட் செய்வதற்கு https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் உள்நுழைந்து, ‘farmers corner’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதில் ‘e-kyc’ என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் புதிய பேஜ் ஒன்று ஓப்பன் ஆகும்.
உங்களுடைய ஆதார் நம்பர், கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு search பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுடைய மொபைல் நம்பரைப் பதிவிட்டால் அதற்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும்.
ஓடிபி நம்பரைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும். இப்போது உங்களுடைய பிஎம் கிசான் கணக்கு அப்டேட் ஆகிவிடும்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 10ஆவது தவணைப் பணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.