Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! PM கிசான் திட்டத்தில்…. பதிவு செய்வது எப்படி….?? வாங்க பார்க்கலாம்…!!!

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் புதிய விதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கே.ஒய்.சி எனப்படும் சரிபார்ப்பு முடித்தால்தான் பலன் கிடைக்கும்.

இல்லாவிட்டால் நிதி உதவி வருங்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.இதற்கு முன் pm-kisan திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார், வங்கி கணக்கு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அவசியமாக இருந்தது.அதில் ஏதேனும் பிழை திருத்தம் இருந்தால் பணம் சரியாக வந்து சேராது. ஆனால் தற்போது சரிபார்க்கும் விதிமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி இத்திட்டத்தில் பதிவு செய்ய www.pmkisan.gov.in சென்ற farmers corner க்ளிக் செய்து New farmer registration என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் விண்ணப்பத்தில் பெயர், முகவரி, நில இருப்பு, மொபைல் நம்பர், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும். இணைந்து விவரங்களை Beneficiary status பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |