விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் நலன் குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, 2000 விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு முன்னுரிமை வழக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என்றும் அரக்கோணம் தொகுதி நாகவேடு கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி 6 மாதத்தில் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.