Categories
தேசிய செய்திகள்

 விவசாயிகள் அறப்போராட்டம்… கனடா பிரதமருக்கு திருமாவளவன் பாராட்டு…!!!

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கனட பிரதமருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில் இந்திய விவசாயிகளின் அறப்போராட்டத்தை ஆதரித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக சக்திகளுக்கு தேசம், மொழி மற்றும் இனம் போன்ற வரம்புகள் தடைகளாய் இருப்பதில்லை. பிரதமர் ஜஸ்டின் ஜனநாயக அணுகுமுறைகளுக்கும் அவரின் துணிவிற்கும் எனது பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |