வாழைத்தார் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு, பத்மநேரி, சிதம்பரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய தோட்டங்களில் தொடர்ந்து வாழைத்தார்கள் திருடு போவதாக 13 விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் புலவன் குடியிருப்பைச் சேர்ந்த ஜோதி முத்து என்பவர் வாழைத்தார்களை திருடி வந்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ஜோதிமுத்து தான் திருடிய வாழைத்தார்களை லோடு ஆட்டோவில் ஏற்றி சிறுமளஞ்சி சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 93 வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.