Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கவில்லையா….?” இதோ உங்களுக்கான தகவல்…!!!!!

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை விவசாயிகள் இணைப்பதற்கு அஞ்சலகங்களை அணுகலாம் என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வழங்கி வருகின்றது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெரும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவர்கள் பகுதியில் இருக்கும் அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உடனடியாக இணைத்து பயனடைய வேண்டும். இந்த சேவைக்காக 50 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா கூறியுள்ளார்.

Categories

Tech |