Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் ஆவேச போராட்டம்… விவசாய கொடியைஏற்றி… செங்கோட்டை முற்றுகை …!!

செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்குள்ள கம்பத்தில் விவசாய சங்கத்தின் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.

செங்கோட்டை என்பது நாட்டின் மிக முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர்கள் வழக்கமாக மூவர்ணக் கொடியை ஏற்றி இங்கு தான் நம்முடைய சுதந்திரத்தை நாம் பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம். இன்று இந்திய குடியரசு தினம் என்பதால் வழக்கமாக இது போன்ற சுற்றுலாத் தளங்களில் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் ஒரு பகுதியினர் செங்கோட்டையை நோக்கி முன்னேற தொடங்கி தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் என்பது மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் செங்கோட்டையில் இன்று காலை நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற அனைத்து அலங்கார ஊர்திகளும் செங்கோட்டை வளாகத்தில்தான் நிறுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை வளாகத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கண்காட்சி போல் அங்கு நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

தற்போது விவசாயிகள் செங்கோட்டையை கைப்பற்றி அங்கு போராடி வருவது அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். இதில் ஒரு போராட்டகாரர் அங்குள்ள கம்பத்தில் விவசாய கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.

Categories

Tech |