விவசாயிகள் இல்லை எனில் இந்தியா இல்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
மாநிலங்கள் அவையில் தேசிய அவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான திரு குலாம்நபி ஆசாத் விவசாயிகள் இல்லை எனில் இந்தியா இல்லை என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும் என்று கூறினார். விவசாயிகளுடன் மத்திய அரசு போர் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். பிரதமர் திரு.நரேந்திர மோடியால் மட்டுமே விவசாயிகள் பிரச்சனை மட்டும் ஜம்மு காஸ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்டார்.