Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாயிகள் ஒருங்கிணைப்பு விழா… 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ப்பு…

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தினுடைய 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தினுடைய 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாகவும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் துணை இயக்குனர் முனைவர் டாம்பிசைலஸ் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கண்ணையா, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி உதவி இயக்குனர் அமர்லால், வேளாண் அலுவலர் சுந்தரம், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் பானுமதி, பழனி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு பூச்சிகளின் நன்மை, தீமை குறித்தும், பூச்சிகளை கண்டறிதல் மற்றும் அதனுடைய முக்கியத்துவம் குறித்தும் விளக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து களைகளின் வகைகள், களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் கொள்முதல், விலை பொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேகரித்து வைப்பது ஆகிய பல்வேறு பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விவசாயிகள் கலந்குகொண்டு பயன் பெற்றுள்ளனர்.

Categories

Tech |