மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் வருவாய் கிராமங்களில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பட்டா கணினி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாளை சடயமங்கலம், நெற்குப்பை, கூட்டுறவுபட்டி, படமாத்தூர், அன்னவாசல், விசவனூர், கட்டனூர், விலாக்குலம் ஆகிய வருவாய் கிராமங்களில் கணினி பட்டா திருத்த முகாம் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தங்களது பட்டா பிரச்சனை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.