Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” 31-ஆம் தேதிக்குள் டி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அதன்பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது. குறுவை  பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படாமல் விடுபட்டு போனது. எனவே சம்பா பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையடுத்து டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு மறைமுகமாக தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை திட்டங்கள் முழுவதும் விவசாயிகளுக்கு  சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது . இந்த குறைபாட்டை அதிகாரிகள் நேரில் தலையிட்டு களைய வேண்டும். மேலும் நடுத்தர வயதுடைய விதைகள் வேளாண் விரிவாக்க மையத்தில் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் வெளிச்சந்தைக்கு சென்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதற்குரிய மானியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நமது மாவட்டத்தில் 61 ஆயிரத்து 588 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு முறையிலும் , செம்மை  நெல் சாகுபடி நடைமுறையிலும் இதுவரை ஆயிரத்து 654 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசாம் திட்ட வலைதளத்தில் விவசாயிகள் வருகின்ற 31-ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்  என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |