Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி இத்தனை சதவீதம் வரை ஈரம் பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பலரின்  கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு  மழையில் நனைந்ததமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல்லை  22 சதவீத வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் சார்பில் கடிதம் எழுதி அனுப்பப்பட்டது.

மேலும் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயனும், மத்திய உணவுத்துறை செயலாளரை  சந்தித்து 22 சதவீதம்  ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு  கொள்முதல் அளவை 19 சதவீதமாக  உயர்த்தியுள்ளது.

Categories

Tech |