Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார்.

இந்தக் கூட்டத்தில் கால்நடைகள் பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். எனவே இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |