பிரதமரின் விவசாயிகள் நல காப்பீடு திட்டம்
எதற்காக இந்த திட்டம்
# இந்திய மக்கள்தொகையில் 58 சதவீதம் நபர்களுக்கு வேளாண்மை என்பது முதன்மை வாழ்வாதாரமாகும், மேலும் 85 சதவீத விவசாயநிலம் 2 ஹெக்டேருக்கு குறைவானது.
# கடந்த 2015 இந்தியா முழுவதும் 207 வறட்சி மாவட்டங்கள் மற்றும் 300 ஒழுங்குமுறை அற்ற மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பயிர் பயிரீட்டில் பெரும் பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டனர்.
# விவசாயிகளின் வாழ்வு தொழிலை மேம்படுத்துவதும் , மேலும் அவர்களின் பயிர் முதலீட்டை பாதுகாத்தல்.
# இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களின் விளைவால் காப்பீடு செய்த பயிர் எதுவும் தோல்வியுறும் நேர்வில் முழுகாப்பீடு காப்பு மற்றும் நிதி உதவி வழங்குதல்.
# புதுமையான மற்றும் அதி நவீன வேளாண் நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல்.
# வேளாண்துறைக்கு கடன் கிடைக்க இருப்பதை உறுதிப்படுத்துதல், விவசாயிகளுக்கான காப்பீடு கட்டணம் தவணைத் தொகை சுமையினைகுறைத்தல்
இத்திட்டத்தின் பயன்கள்:
# பின்வருவன ஆகிய இடங்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.
# உணவுப்பயிர்கள் (தானியங்கள், சிறு தானியங்கள் & பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் ஆண்டு வணிக/ ஆண்டு தோட்டக்கலைப் பயிர்கள்) போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் விவசாயிகள் காப்பீடு கிடைக்கப் பெறுவர்.
# காப்பீடு கட்டணம், காப்பீடு செய்த தொகையில் கரீஃப் பருவ பயிர்களுக்கு 2 சதவீதம், ரபிபருவ பயிர்களுக்கு 5 சதவீதம் மற்றும் வணிகபயிர்கள், தோட்டக் கலை பயிர்களுக்கு 5 சதவீதம் என்பதாக மட்டுமே இருக்கும்
# எடுத்துக்காட்டாக நெல் பயிரீடு செய்யும் 2 ஏக்கர் நிலத்துக்கு ஒரு லட்சம் காப்பீடு செய்யப்படுகிறது என்றால், அதற்கு காப்பீடு கட்டணம் ரூபாய் 2000 என்று மட்டுமே இருக்கும்
# இத்திட்டம் 17600கோடி ரூபாய் வைத்து விவசாயிகளுக்கான காப்பீடு வழங்குகிறது. கடந்த 2017 பட்ஜெட்டில் ரூபாய் 9,000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
# இத்திட்டத்திற்கு விவசாயிகள் அனைவரும் (கடன்இருந்தாலும், இல்லை என்றாலும்) தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
# இந்த ஒட்டுமொத்த காப்பீடு திட்ட நடைமுறை நடவடிக்கையும், மோசடி இன்றி பயனுள்ள திட்டமாக இருக்க செய்வதற்கு விவசாயிகள் சேர்க்கையில் தொடங்கி காப்பீடு தொகை கொடுக்க செய்வது வரை மின்னணு ரீதியாக செய்யப்படும்.
# பின்வருவன ஆகிய இடங்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.
# விளைச்சல் இழப்புகள்
# விதை விதைப்பதில் இருந்து தடுக்கப்படுவது
# அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் /சேதங்கள்
# உள்ளூர் அளவிலான பேரிடர் பாதுகாப்புகள்
# பூச்சிகள் நோய்கள்
இத்திட்டத்தில் சேருவது எவ்வாறு?..
# சேமிப்பு வங்கிகணக்கு வைத்துள்ள விவசாயிகள் இக்காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யலாம். மேலும் இதில் சேர்வதற்காக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை அணுகலாம்.