விவசாயிகளின் சொத்து குறித்த விவரங்கள் குறிப்பிட்டுள்ள சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நாளை தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட உள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,கர்நாடக மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த அட்டையின் மூலமாக சொத்துக்களை பயன்படுத்தி கடன் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி அந்த அட்டையை வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.