Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் போராடுறாங்க…! நாங்க இப்படி தான் வருவோம்…. எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் …!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார்.

இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை அறிக்கை ஆகும். இதனிடையே மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜஸ்பீர் சிங் கில் மற்றும் குர்ஜீத் சிங் ஆஜ்லா ஆகியோர் மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக நாடாளுமன்றத்திற்கு கருப்பு நிற கவுன் அணிந்து வந்தனர்.

Categories

Tech |