Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு… 250 கி.மீ ஜீப் ஓட்டி வந்த… 62 வயது பெண்…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க 62 வயது பெண் ஒருவர் 250 கிலோ மீட்டர் ஜீப் ஓட்டி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 27 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உலகில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 62 வயது பெண் ஒருவர் 250 கிலோ மீட்டர் ஜீப் ஓட்டி வந்து, விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |