விவசாயிகளின் போராட்டத்திற்கு இன்னொரு பிரபல ஹாலிவுட் நடிகை ஆதரவு தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகை சூசன் சாராண்டன் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அவர்கள் ஏன் போராடுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள இதை படியுங்கள் என்று விவசாயிகள் போராட்டம் குறித்து டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ளார்.