டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்க எம்பிக்கள் 7 பேர் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது.
அனைத்து அரசியல் வாதிகள், முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் உலக அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் எம்பி பிரமிளா ஜெயபால் உட்பட ஏழு எம்பிகள் அமெரிக்க அரசு தலையிட்டு போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.