டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று 11வது நாளாக விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஆண்டு ஆனாலும் எங்கள் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் போஸ்டர்களையும் தயாரித்துள்ளனர்.