டெல்லிக்கு நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி என்பது தற்போது டெல்லியில் எல்லைகளில் முழுமையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக டைரக்டர் பேரணி 12 மணி அளவில் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே டெல்லி ஹரியானா எல்லையின் சிங்கூர் பகுதியில் காலை 8 மணியளவில் இந்த பேரணி என்பது தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பேரணி தொடங்குவதற்கு முன்னதாக காவல்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் காவல்துறையினர் தடுப்புகளை தகர்த்தெறிந்து விவசாயிகள் பேரணியாக சென்றனர்.
தற்போது இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர்த்து சஞ்சய் காந்தி நகரில் நுழைய முயன்ற போது தான் விவசாயிகளின் பேரணி மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிகிறார்கள்.இதனால் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி நாங்கள் டெல்லிக்குள் நிச்சயமாக நுழைவோம் என்று தெரிவித்ததால் தற்போது வாக்குவாதமாக மாறி இருக்கிறது.