Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது நடத்திய தாக்குதல்…. மிகவும் கண்டிக்கத்தக்கது…. முதல்வர் ஸ்டாலின்…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய 300 நாள் போராட்டங்களின் காரணமாகவே தான் தற்பொழுது உத்திரப்பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த வன்முறைக்கு காரணமானவர்களின் மீது நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “உத்தரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்திய தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் அதிகமாகி உள்ளது.

இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையை அறிய சென்றதற்காக பிரியங்கா காந்தியும்  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டார்.

இந்த அமைதியின்மைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதனை அடுத்து 3 விவசாயச் சட்டங்களை முழுமையாக ரத்து செய்வது தான் முழு அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசுகள்  உணர வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தது.

Categories

Tech |