விவசாயியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக பல் டாக்டர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பல் டாக்டரான கார்த்திக் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திக் தனது நண்பர்களான ஈஸ்வரன், குமார், பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நம்பிராஜனை அவதூறாக பேசி கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனால் காயம் அடைந்த நம்பிராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நம்பிராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.