கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் விவசாயியான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதிபாளையம் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பாலு தான் ரயில்வேயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என வெள்ளியங்கிரியிடம் தெரிவித்தார்.
இதனை நம்பி வெள்ளியங்கிரி தனது மகன் மற்றும் மருமகளுக்கு வேலை வாங்கி கொடுக்க 18 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பல்வேறு தவணைகளாக பாலுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி பாலு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெள்ளியங்கிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.bஅந்த புகாரின் பேரில் போலீசார் பாலு, அவருக்கு உடந்தையாக இருந்த பாண்டியன், செல்வம், குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.