Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விவசாயியின் கவனத்தை திசை திருப்பி…. 1 1/2 லட்ச ரூபாய் கொள்ளை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மேற்கு தெருவில் விவசாயியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 பவுன் தங்க காசுகளை அடகு வைத்து 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் சோமு அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்களது பணம் கீழே விழுந்துவிட்டது எனக் கூறி சோமுவின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

இதனை நம்பி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சோமு நடந்த சென்று பார்த்த போது இரண்டு பேரும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது சோமு சத்தம் போட்டதால் பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபரும், அவருடன் வந்தவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |