நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார். விவசாயியாக பணிபுரிந்த இவர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.