புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இருந்திராப்பட்டி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்தார். இந்நிலையில் சிதம்பரம் அப்பகுதியிலுள்ள வயலுக்கு சென்ற போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது திடீரென சிதம்பரத்தை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.